Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
வள்ளலார் குரு ??
வள்ளலார் குரு ??
அவர் ஆரிடமும் கற்கவிலை – அவர்க்கு குரு ஆருமிலை என்றே உலகம் கூறும்
உண்மை நிலவரம் :
அருட்பா 4ம் திருமுறை
ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
1 உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே.
2 தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே.
3 தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே.
இம்மாதிரியாக 10 அருட்பாக்கள் திரு ஞான சம்பந்தர் மீது வள்ளல் பெருமானார் பாடியுள்ளார்
ஆளுடைய பிள்ளைகள் = ஞான சம்பந்தப் பெருமான்
சற்குருவே – குருமணியே என்றெலாம் பாடியிருப்பதால் , திரு ஞான சம்பந்தர் , இவர்க்கு முதல் குரு ஆவார் என்பது உறுதியாகுது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.