Monday, March 9, 2026

ஞானியர் கருத்து ஒற்றுமை “

ஞானியர் கருத்து ஒற்றுமை “ 1 திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய திருக்கற்குடி திருத்தாண்டகம் மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்தி ரண்டை விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க 2 மாணிக்க வாசகர் - திருவாசகம் : போற்றி அகவல் “பாரிடை ஐந்தாய்” பரந்தாய்ப் போற்றி ” நீரிடை நான்காய் ” நிகழ்ந்தாய்ப் போற்றி ” தீயிடை மூன்றாய்” திகழ்ந்தாய்ப் போற்றி ” வளியிடை இரண்டாய்” மகிழ்ந்தாய்ப் போற்றி ” வெளியிடை ஒன்றாய்” விளைந்தாய்ப் போற்றி இந்த இரு பதிகமும் ஒரே கருத்தை தான் பாடுகின்றது இறைவன் எப்படி 5 பூதங்கள் வடிவாக நம்முடலில் கலந்து இருக்கின்றான் என்பதை இப்பாடல் விளக்குகின்றது “பாரிடை ஐந்தாய்” = மண் – 5 பாகங்களாக – மெய் , வாய், கண் , மூக்கு , செவி ஆகிய பாகங்களாக ” நீரிடை நான்காய் ” = நீர் = 4 பாகங்கள் – கண்ணீர் , சிறு நீர் , ரத்தம் , அமுதம் ஆகிய பாகங்களாக ” தீயிடை மூன்றாய்” = 3 பாகங்கள் – சூரியன் – சந்திரன் – அக்கினி ஆகிய பாகங்களாக ” வளியிடை இரண்டாய்” = 2 பாகங்கள் – பிராணன் – அபானன் ஆகிய பாகங்களாக ” வெளியிடை ஒன்றாய்” = 1 பாகம் – சிதாகாஸப் பெருவெளியாக இவ்வாறெல்லாம் இறைவன் நம்முடலில் கலந்து அருள் செய்த வண்ணம் உள்ளான் ஞானியர் மத்தியில் கருத்து ஒற்றுமை தான் இருக்கும் வேற்றுமை இருக்கவே இருக்காது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.