Monday, March 2, 2026

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை அருட்பா 6 ம் திருமுறை - தனித்திருஅலங்கல் தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே பொருள் : தன் சுய வெளியில் – துவாத சாந்த பெரு வெளியில் இலங்குகின்ற பொருளே மௌனத்தில் இருக்கும் ஒளியே வேதத்தின் மேல் நின்ற ஒளியே நீ எழுந்தவுடன் – உன் ஒளி தோன்றியவுடன் மாயையும் வல் வினைகளும் மடிந்தனவே என ஆன்மா பெருமை பாடுகிறார் வள்ளல் பெருமான் ஆன்மா சன்னிதானத்தில் மாயையும் கர்மமும் காரியப்படாது என இதன் மூலம் தெளிவு படுத்துகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.