Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம்
சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம்
நெற்றி பற்றி உழல்கின்ற நீலமாவிளக்கினை
பற்றி ஒற்றி நின்று பற்றுத்தது எம் பலம்
உற்றிருந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனாய் அமர்ந்திட அறிந்தவன் அனாதியே
விளக்கம் :
திருவடி தவத்தின் பயனாய் அனுபவமாய் – நெற்றியில் நீல ஒளி தெரியும்
அது தான் நீல நிற உடல் உடை ஸ்ரீ ராமன் ஆம்
அதன் அனுபவம் :
உலகத்துடன் பந்தம் அறுக்கும்
பெண் மோகம் ஒழியும்
5 புலன் சேட்டை குறையும்
சதா பர நினைவு இருக்கும்
இது தான் சாதகன் பெறும் பலம் ஆம்
அதை உற்று உற்று பார்த்து , பார்வை சுவாசம் கட்டி வைத்து தவம் செய்து வந்தால் , அதன் மேல் அனுபவமாய் ஆன்ம அனுபவம் சித்திக்கும்
அந்த ஆன்ம அனுபவத்தில் நிலைத்திருக்க வல்லான் காலத்தை கடந்தவன் ஆகிறான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.