Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
திருவாசகம் – திருச்சாழல் பதிகம் - ஆலாலம் – சன்மார்க்க விளக்கம் “
திருவாசகம் – திருச்சாழல் பதிகம் - ஆலாலம் – சன்மார்க்க விளக்கம் “
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ!
இந்த பாட்டு எனக்கு பிடித்த – மனப்பாடம் ஆன பாட்டு
நான் கல்லூரி படிக்கும் சமயத்தில் பிரதோஷ கால பூஜையில் – சென்னை சிவன் கோவிலில் – ஓதுவார் இந்த பாடல் பாடுவார்
நான் விளக்கம் படித்து பார்த்ததில் – ஆலாலம் எனில் பாற்கடல் கடைய , அதிலிருந்து வெளிப்பட்ட விஷம் + வாசுகி உமிழ்ந்த விஷம் என அளித்திருந்தார்
இந்த பாடல் கேட்கும் படிக்கும் போதெலாம் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும்
நீண்ட நாள் ஆய்வுக்குப் பின் இந்த பாடலுக்கு உண்மையான பொருள் கண்டுபிடித்தேன்
விளக்கம் :
ஆலாலம் – ஆலம் + ஆலம்
ஆலம் = நேத்திரம் ஆகிய நெற்றிக்கண்
ஆலம் = அதை சூழ்ந்திருகும் இருள் விஷம்
இந்த பாடல் சிவம் சுழிமுனை உச்சியில் விளங்கும் இருளை விழுங்கினான் என்பது தான் திரண்ட கருத்து
சாழல் – மனமற்ற /எண்ணமற்ற நிலை குறிப்பது ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.