Saturday, March 14, 2026

திருவாசகம் – அச்சோப்பத்து பதிகம் - சன்மார்க்க விளக்கம்

திருவாசகம் – அச்சோப்பத்து பதிகம் - சன்மார்க்க விளக்கம் மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே 4 விளக்கம் : இந்த பூமியில் பிறந்தும் இறந்தும் கொண்டிருந்தேனை , இந்த சுழற்சியிலே உழன்றிருந்தவனை , அன்பாகிய ஆன்மா என்னும் எண்ணமிலா நிலை அருளியும் , வெண்ணீறாகிய அருள் நீறு எனக்கு உகந்து அளித்து இறவா நிலை சேரும் வண்ணம் எனக்கு அருளியவாறு சிவம் ஆர்க்கு செஉயும்?? அன்பு = ஆசையிலா ஆன்மா வெண்ணீறு = அருள் பொடி என அறிதல் வேண்டும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.