Saturday, March 21, 2026

திருமந்திரம் ஆறாம் தந்திரம் - தவம்

திருமந்திரம் ஆறாம் தந்திரம் - தவம் “ பார்வை – அசைவொழித்தல் பெருமை “ சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோ லார்த்த பிறவி அகலவிட் டோடுமே 1631 விளக்கம் : சாத்திரம் ஓதுபவர்களை – அதன் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு , தவம் செய்து பார்வை உள் செலுத்தி நோக்குங்கள் அவ்வாறு நோக்குவதால் , அது அசைவற நிற்கும் போது , அதன் பயனால் அனுபவங்களால் , பலப்பல அனுபவம் கிட்டி , பிறவித்துயர் கெடும் என்றவாறு பார்வை மற்றும் அசைவொழித்தல் பெருமை பாடுவது இந்த மந்திரம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.