Saturday, March 14, 2026

ஞானியர் ஒற்றுமை “

ஞானியர் ஒற்றுமை “ பட்டினத்தார் என்ன தான் கற்றாலும் எப்பொருளும் கற்றாலும் என் உனையறியார் உய்வரோ பூரணமே?? காரை சித்தர் ஞானம் பெருமை – ஶ்ரீகாரைச்சித்தர் 1 எத்தனைதா னிருந்தாலு மென்னே யென்னே இருக்குமிட மிருப்பிடமா யில்லை யென்றால் 2 எத்தனைதான் சிந்தித்தும் பயன்தா னென்னே இறையளவும் மோனநிலை யில்லை யென்றால் 3 எத்தனைதான் வந்தித்தென் நிந்தித் தென்னே ஈசனரு ளாங்கவச மில்லை யென்றால் 4 அத்தனையும் பாழாகும் கந்த னென்பாய் அவனருளால் பாவமெலாம் விலகிப் போமோ 252 விளக்கம் : 1 உலகில் மாந்தர்க்கு சொத்து எவ்வளவு தான் இருந்தால் தான் என் பயன் ?? தான் வாழும் உலகம் இடம் வீடு தன் இருப்பிடமாக இல்லாத போது ?? ஓரு பயனுமின்று 2 மனிதர் என்ன தான் சிந்தித்து பெரிய விஞ்ஞானி ஆக ஆனால் தான் என் பயன் ?? மோன வரம்பு கூடாத போது ஒரு பயனுமிலையாம் 3 சிவனார் அருள் இலை எனில் – எத்தனை தான் போற்றினால் / தூற்றினால் தான் என் பயன் ?? 4 ஆன்மா அதன் அருளால் பாவமெல்லாம் பறந்து போகுமே ஞானியர் கருத்து ஒருமித்துளார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.