Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
சாவேபோ - சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பெருமை “
சாவேபோ - சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பெருமை “
திருவருட்பா - ஆறாம் திருமுறை
நடராஜபதி மாலை
சுத்த சன்மார்க்கத்தின் மரபு
சாகாத கல்வியே கல்வி - ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே அறிவு
மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்
விளையவித்த தொழிலே
மெய்த்தொழில தாகும் - இன்னாங்கையும் ஒருங்கே
வியந்தடைந்து உலகமெல்லாம்
மாகாதலுற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வானவரமே இன்பமாம்
மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபென்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடுனின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே ( பாடல் - 62 )
விளக்கம் :
வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்
விளையவித்த தொழிலே
அப்படி எனில் இது சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் ஆகிய மூன்றையுமே தான்
குறிக்கின்றதே அல்லாமல் வேகாக்கால் மட்டுமே குறிக்க வரவிலை
இது என்ன சொல்ல வருது ??
சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பது பஞ்ச பூதம் குறிப்பது
அதை வசம் செய்து கொள்வதன் மூலம் உலகில் எல்லா பொருளையும் நாம் தோற்றுவிக்க உருவாக்க முடியும் என்பது தான் அது
உலகில் எல்லா பொருளுக்கு மூலம் சூக்கும 5 பூதங்கள்
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.