Wednesday, March 4, 2026

திருப்பாவை – திருவெம்பாவை : சன்மார்க்க விளக்கம்

திருப்பாவை – திருவெம்பாவை : சன்மார்க்க விளக்கம் வழி வழி வந்த நம்பிக்கைபடி : திருமணம் ஆகாத கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொண்டால் , அவர்களுக்கு ஏற்றாற் போல் மணமகன் வந்து கரம் பிடிப்பான் என்பது நம்பிக்கை நம்பிக்கை வந்ததன் பின்னணி : ஆண்டாள் இந்த நோன்பை மேற்கொண்டு தான் � ரங்கனை� கரம் பிடித்தாள் என்பதனால் , எல்லா கன்னியர்கள் இந்த ” பாவை நோன்பை ” மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள் ஆண்டாள் , தான் தொடுத்த பூமாலையை தினமும் சூடிப் பார்த்து , கண்ணாடியில் அழகு பார்த்து – திருவடியின் அழகு பார்த்தும் இரசித்துப் பின் அதனை ரங்கனுக்கு அனுப்பி வைப்பாள். எல்லோரும் , ஏன் அவளது வளர்ப்பு தந்தை பெரியாழ்வார் கூட அவள் அழகைத் தான் கண்ணாடியில் பூச்சூடி ரசிக்கின்றாள் என்று நினைத்தனர். ஆனால் உண்மை என்னவெனில் – அவள் தன் அழகை ரசிக்கவில்லை – கண்ணில் தெரியும் திருவடியின் அழகை பூச்சூடி ரசித்தாள். கண்மணியில் இறைவன் திருவடிகள் நடனமாடிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை திருவள்ளுவர் கூறியபடி இந்த திருவடிகளைப் பிடித்தால் தான் ,� பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்க முடியும் – பொற்சபை – சிற்சபைக்குள்ளும் -பொன்னம்பலத்திற்குள்ளும் சிற்றம்பலத்திற்குள்ளும் � நுழைய முடியும் என்பது திண்ணம் அதனால் தான் திருவடிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வள்ளலார் -” திருவடிப் புகழ்ச்சி – திருவடிப் பெருமை – திருவடிப் பேறு ” என்றெல்லாம் அதனை உயர்த்தி பெருமை பேசுகின்றார். எனவே திருப்பாவை – திருவெம்பாவை என்பது கண்மணியில் துலங்கும் திருவடிகளின் பெருமை- வல்லபம் பற்றிய பாக்களே அல்லாது வேறில்லை தேசியக் கவி பாரதியின் கவிகளில் வரும் கண்ணன் – கண்ணம்மா என்பதுவும் கண்மணிகளைக் குறிக்க வந்த பாடல்களாகும் – புறத்திலே இருக்கும் மனிதர்களை அல்ல என்பது முற்றிலும் உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.