Thursday, March 5, 2026

முத்தியும் சித்தியும்

முத்தியும் சித்தியும் வள்ளலார் : �முத்தி என்பது முன்னுறு சாதனம் � � சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் � � முத்தியைப் பெற்றேன் அம்முத்தியினால் ஞான சித்தி அடைந்தேன் � இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் : முத்தி என்பது நாம் செய்ய வேண்டிய சாதனை – பயிற்சி அதுவே முடிந்த முடிபு அல்ல – இறுதி அல்ல முத்தி – � மூன்று தீ �ீ என்பது தான் முத்தியாக சுருங்கி இருக்கின்றது சாதனா தந்திரத்தால் நம் சிரசில் , சோம – சூரிய – அக்கினி – மூன்று தீக்களை ஒன்றாக்கினால் , அதுவே முத்தி ஆகும். இந்த மூன்றும் ஒன்றாக்கினாலே – �காலம் கடந்த அனுபவம் � சித்திக்கும் இது தான் அடிபடையான பயிற்சியாகும் மேலும் இது தான் எல்லா சித்திக்கும் அடிப்படையாகும் இதுவே பெருஞ்சோதி . இந்த ஜோதியே அருளைத் தருவதால் – அப்போது அருட்பெரும்ஜோதி ஆகின்றது இந்த நிலையிலிருந்து நாம் அனுபவ முதிர்ச்சியே சித்தியாகும். இந்த சித்திகள் தான் : அஷ்டமா சித்தி 2.கரும சித்தி யோக சித்தி 4 ஞான சித்தி என்று வகைப் படுத்துகிறார்கள் 5 காய சித்தி ( காய கல்பம் ) மரணமிலாப் பெருவாழ்வு இந்த சித்திகள் யாவும் கைவரப் பெறுவது , ஆன்ம நிலை அடைந்து , அதன் பின்னர் ஆன்ம அனுபவம் பெற்று, அதன் முதிர்ச்சியினால் தான். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.