குரு பெருமை - அறம்பாடி சித்தர்
நெற்றிக்கண்ணற்றோர் குருவாய் நிறைந்த நீணிலத்தில்
சக்தி கண் திறந்ததோர் தவ ஞானி குருவாய் வாய்த்து
ஐயன் தழல்கண்ணை திறந்திட்டு அஞ்ஞானமறுத்தெடுத்து அழுக்கனைத்தும் எரித்து
கறையிலா காஞ்சனமாய் வளங்கொழிக்க வாழ்த்திட்ட
அக்குருவை யாமும் அகக்கண்ணால் கண்டோமவர் …
விளக்கம் :
இந்த பெரிய உலகில் நெற்றிக்கண் திறக்கப்பெறா அனேகர் இருக்கையில் , அவ்வாறிலாமல் – நெற்றிக்கண் திறந்த ஒரு ஞானி எனக்கு வாய்த்து , அதை திறந்திட்டு , என்னுடைய மலமெல்லாம் அழித்து எந்த அழுக்குமிலாதவனாய் சுத்தனாய் – என் வாழ்வில் வளம் சேர்க்க வந்த அத்தகைய குருவை நான் என் நெற்றிக்கண்ணால் கண்டனன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.