Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 23, 2026
கண் தவம் - திருவடி தவம் பெருமை “
கண் தவம் - திருவடி தவம் பெருமை “
இராமாயணம்
சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு
இவர் அண்ணன் ஜடாயு
இவர் சூரியன் நோக்கி பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார்
அவர் இறக்கைகள் வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது
அப்போது ராமனும் அவருடன் வானர கூட்டமும் , சீதை தேடி வருகின்றது
அப்போது சம்பாதி , நான் ஒருவன் வான ஊர்தியில் ஒரு பெண்ணை அழைத்துச்சென்று கொண்டிருந்தான்
அவள் சீதையாகத் தான் இருக்க வேணும்
பின் நான் சீதை எங்கிருக்காள் என பார்த்துச்சொல்கிறேன் எங்கிறது
கழுகுளுக்கு தீர்க்க பார்வை - மேகத்தை தாண்டி பறக்க வல்லவை
கண்பார்வையும் 36 தத்துவம் தாண்டி செல்லக்கூடியவை என்பதை உணர்த்தத் தான் பார்வைக்கு உவமானமாக கழுகு பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கு
அது தன் பார்வையால் பார்த்து :
சீதை இலங்கையில் தான் இருக்கிறாள்
என் கண்ணுக்கு அவள் தெரிகிறாள் என்கிறது
சரி இதை ஏன் கூறுகிறேன் எனில் ??
இதுக்கும் கண் /திருவடி தவத்துக்கும் சம்பந்தம் இருக்கு என்பதால் இங்கே சொல்கிறேன்
இதை ஏன் ரிஷிகள் யோகியர் இந்த இதிகாசத்தில் கதையாக சொல்கிறார் எனில் ??
உண்மையில் , திருவடி தவத்திலும் கண் பார்வையால் – சுழுமுனை உச்சி தென்படும்
இராவணன் இருக்கும் இலங்கை ஆகிய சுழுமுனை உச்சி பார்க்க முடியும் என்பதை எப்படி தங்கள் அனுபவத்தை தவசிகள் இதிகாசமாக உரைத்துள்ளனர் ??
திருவடி தவத்தில் பார்வை மேலேறிப் பார்க்கும் போது , கைலாயம் தெரியும்
இதைத் தான் இந்த காட்சி கூற வருது
இந்த தவ அனுபவத்தை இந்த காட்சி மூலம் உணர்த்துகிறார் நம் தவ ரிஷிகள் யோகியர் ஞானியர்
இதை நான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த போது , உடல் சிலிர்த்து விட்டது
பிரமித்துப்போய்விட்டேன்
அப்பா , நம் முன்னோர்க்கு என்ன அறிவு ?? அபார அறிவு தான்
இது இதிகாசப் பெருமை கூட
சன்மார்க்கம் இதிகாசம் ஒதுக்கி வைத்தபடியால் இதன் அருமை பெருமை தெரியவிலை – என்ன தவம் சாதனம் என விளங்கவிலை அவர்க்கு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.