Tuesday, March 10, 2026

திருப்பாதிரிப்புலியூர் சன்மார்க்க விளக்கம் “

திருப்பாதிரிப்புலியூர் சன்மார்க்க விளக்கம் “ இந்த கோவில் கடலூரில் இருக்கு இங்கு புலிக்கால் முனிவர் எனும் வியாக்கிரபாதர் பூசித்த ஸ்தலம் என்பதாலும் இந்த ஊர் சரி ஏன் புலியூர் ?? இது வித்தியாசமானதாக இருக்கு வியாக்கிரபாதர் – மரத்தில் விழும் – வண்டுகள் உண்ட பூவை வைத்து இறையை பூசிக்க விரும்பாமல் , சிவத்தை நோக்கி தவம் இருந்து , இரவிலும் தெளிவான ” பார்வை ” , மரம் ஏறுவதுக்கான புலிக்காலும் நகமும் பெற்றதாக புராண வரலாறு புராணத்தின் உண்மை விளக்கம் : திருவடிகள் – பார்வை புலிக்கு உவமானமாக்கப்பட்டிருக்கு புலி பார்வைக்கு பேர் போனது என்பதால் இந்த உவமானம் புலி பார்வை - கால் – நகம் எல்லாமே திருவடி அதன் செயல்பாடு குறிப்பதாம் அதாவது திருவடி பார்வை மேலேறுவதை தான் இவர் மரம் ஏறி பூ பறிப்பதாக காட்டப்பட்டுளது இவர் சிதம்பரத்தில் சுத்த சிவத்தின் நடம் கண்டார் எனில் , ஆன்ம சாதகனின் பார்வை அவ்வளவு தூரம் மேலேறி – சிற்றம்பலம் நுழைந்து அங்கு சிவத்தின் திரு நடம் காண முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கவே இந்த புராணம் ஆக வியாக்கிரபாதர் ஒரு தத்துவ உருவகம் அன்றி வேறிலை திருவடி பயிற்சி விளக்க வந்த புராணம் ஊர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.