Saturday, March 7, 2026

திருமந்திரம் – காலம் கடக்கும் தந்திரம்

திருமந்திரம் – காலம் கடக்கும் தந்திரம் 1 மூலத்துவாரத்து மூளும் ஒருவனை மேலைத்துவாரத்தை நோக்கி முற் காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே 2. மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்திது தானே மூலத் துவாரம் - சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம் மேலைத் துவாரம் - சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம் இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் : சுழிமுனைத் துவாரத்திலேயே மனமும் கண்களும் லயித்து அசைவற்று நோக்கியிருந்தால் - காலத்தை வெல்லலாம் என்பதாம் காலம் எனில் கோள்கள் கடந்த நிலை – வினைகள் வெல்லும் நிலை யமனை அல்ல மரணத்தை வெல்லுதல் என்பது இன்னும் பலப்பல படிகள் கடக்க வேண்டி உள்ளது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.