Saturday, March 7, 2026

தவள மாடம் – 2

தவள மாடம் – 2 அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே ( பாடல் 68) அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் – பிரம்மாவும் விஷ்ணுவும் சிவத்தை – APJ ஆண்டவரைத் தேடி தேடி காணாது திகைக்கின்றனர் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் – தேவர்கள் நாமெல்லாம் காண முடியாத போது இவன் சிவத்தை காண முடிகிறதென்றால் , இவன் செய்த தவம் தான் என்ன என்று வினவினர் மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே – இங்கு தவள மாடம் என்பது ஆன்ம அனுபவத்தைக் குறிக்கின்ற வெள்ளை மாளிகை தவளம்= வெள்ளை – சாம்பல் பூத்த வெண்மை திரண்ட கருத்து : மூவரும் காண முடியாத ஆன்மாவையும்/ சிவத்தை தன் தவத்தால் கண்ட அனுபவத்தை இப்பாடல் மூலம் வள்ளல் பெருமான் விளக்குகிறார் இந்த பாடல் விளக்கம் கீழ் உள்ள படம் தெளிவுபடுத்தும் அதாவது , மும்மலம் எரிந்து நாசம் ஆகில் அதில் தோன்றும் சாம்பல் வெண்மை தான் தவள மாடம் அது எழு நிலை மாடம் மேல் மேல் நிலையில் உச்சியில் இருப்பதை ஜாடையாக பாடுகிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.