Thursday, March 5, 2026

அருட்பா ஆறாம் திருமுறை -  நடராஜபதி மாலை

அருட்பா ஆறாம் திருமுறை -  நடராஜபதி மாலை 13. அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு அடியினொடு முடியும்அவையில் கண்டபல வண்ணமுத லானஅக நிலையும் கணித்தபுற நிலையும்மேன்மேல் கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்துநிறை கின்றஒளியே கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட குறியே குறிக்கஒண்ணாக் குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம் கொண்டதனி ஞானவெளியே தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராஜபதியே. விளக்கம் :  இந்த அருட்பாவில் மேலான அவத்தை பற்றிய தன் அனுபவத்தை பாடுகிறார் குரு துரியம்  சுத்த சிவ துரியம்  இது பற்றி எல்லாம் பேசுவோர் சன்மார்க்கத்தில் மிக மிக அரிது  அதாவது குரு துரியம் – ஆன்மா விளங்கும் துவாத சாந்தம் ஆகும் சுத்த சிவ துரியம் என்பது அபெஜோதி அனுபவமாகும் சிற்றம்பலம் ஆகும் இந்த வெளிகளில் ஞான வெளிகளில் சுத்த நடமிடும் சுத்த சிவ சன்மார்க்கத்தின் பதியாகிய நடராஜர் ஆகிய அபெஜோதியே  ஆனால் சில கயவர்கள் நடராஜர் சமய தெய்வம் என்றும் கர்ம சித்தர் எனவும் பேசி வீடியோ போடுகிறார்  ஒரு பாட்டில் ஒரு சேர ஆன்மா அபெஜோதி அவத்தை அனுபவம் விளக்குகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.