Saturday, March 14, 2026

பட்டினத்தார் அருட்புலம்பல்

பட்டினத்தார் அருட்புலம்பல் 1 ஏட்டுக்கு அடங்காண்டி! எழுத்தில் பிறவாண்டி! நாட்டில் நரிகளெல்லாம் நல்புரவி செய்தாண்டி! விளக்கம் : இறை நூல் கல்வியாலும் எழுத்தாலும் அறியொண்ணாதவனாக விளங்குகின்றான் அவன் நம் உடலில் இருக்கும் அபானன் யாவையும் வாசியாக மாற்றி அருள் செய்தான் நரி – அபானன் பரி - வாசி 2 பேசாப் பிரமமடி! பேச்சிறந்த பேரொளிகாண்! ஆசா பாசங்கள் அணுகாத வேரொளிகாண்! விளக்கம் : ஆன்மா மௌனத்தில் இருப்பது அந்த பேரொளியானது ஆசை பாசம் அணுகா உயரத்தில் விளங்குவது ஆன்மா நிலை பெருமை குறித்து சித்தர் உரைத்தவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.