Saturday, March 7, 2026

திருமந்திரம் - ஏழாம் தந்திரம் – நெற்றிக்கண் திறக்கும் வழி

திருமந்திரம் - ஏழாம் தந்திரம் – நெற்றிக்கண் திறக்கும் வழி வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவிரு மலங் காலையு மாலையு மூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுறு பாலனு மாமே.1824 விளக்கம்: வேள்வி அவிர் பாகம் எடுத்துக்கொள்ளும் ஆன்மா ஆகிய இறைவன் அந்த அக்கினி மூலம் நம் மும்மலம் நாசம் செய்யும் எப்படி எனில் ?? எப்படி அவிர் பாகம் எனில் நாம் வேள்வித்தீயில் இடும் திரவியம் ஆவியாகி அது இறைக்கு சேருதோ ?? அதே மாதிரியாக விந்து பரவிந்துவாக மாறி அதன் வெப்பத்தால் சுத்த உஷ்ணத்தால் அது மும்மலத்திரை நாசம் செயும் என்ற அனுபவத்தை இந்த மந்திரத்தில் விளக்குகிறார் சித்தர் பெருமான் சடை – நெற்றிக்கண் இந்த மந்திரத்தில் நெற்றிக்கண் திறந்து ஞானம் அடையும் ரகசியம் ஒன்றை உடைக்கிறார் திருமூலர் பெருமான் 2 நாம் உண்ணும் சமயத்தில் முதலில் நெய் சாதம் சாப்பிடுகிறோம் ஏன் ?? அது உணவில் இருக்கும் விஷம் கெடுக்கும் நெய் எதில் இருந்து வருது ?? பால் தயிர் மோர் பின் நெய் இந்த நெய் விந்துவுக்கு சமானம் அதனால் தான் நெய்விளக்கு ஏற்றுகிறோம் அது ஆன்ம தீபம் எப்படி நெய் உணவில் விஷம் நீக்குமோ ?? அவ்வாறே தான் விந்துவும் ஜீவன் கண் உள்ள விஷமாம் மும்மலத்தை நாசம் செய்யும் அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.