Wednesday, March 18, 2026

நவராத்திரி விழா – சன்மார்க்க விளக்கம்

நவராத்திரி விழா – சன்மார்க்க விளக்கம் இந்த பண்டிகை இம்மாதம் கொண்டாடப்படுகின்றது இதை எப்படி விளக்குகின்றனர் 3 நாட்கள் – லட்சுமிக்கும் 3 நாட்கள் – சரஸ்வதிக்கும் 3 நாட்கள் – துர்க்கைக்கும் என பகர்கின்றனர் நம் மக்கள் இதெல்லாம் கட்டுக்கதை – பொய் உண்மையில் நவராத்திரி விழா என்பது ஒன்பது ஒளிகள் – நவரத்தின ஒளிகளை சாதனாதந்திரத்தால் ஒன்று சேர்த்து , அதை ஆயுதமாகக் கொண்டு தீய குணங்கள் – மும்மலங்களை அழிப்பதாகும் – வெல்வதாகும் இது தான் இவ்விழாவின் உண்மையான தாத்பரியம் ஆகும் இந்த 9 ஒளிகளையும் 10 வது வாசலாகிய ” ய” காரத்துக்கு மேலேற்றி அங்கிருக்கும் மும்மலங்களை அழிப்பதைத் தான் ” தசரா” ( தஸ் = 10 பத்து ) , ” விஜய தசமி ” ( தசமி = 10 ) என்றும் நாம் கொண்டாடுகின்றோம் இங்கு விஜயன் = அர்ஜுனன் இதை பத்தாவது நாளில் விஜயன் மும்மலங்களாகிய கௌரவர்களை அழித்ததால் , விஜய தசமி என்று பெயரிட்டனர் உண்மைக்கும் நாம் செய்யும் கிரியைக்கும் – கொண்டாட்டத்துக்கும் எவ்வளவு வேறுபாடு ?? அதனால் தான் மக்கள் இருளில் இருக்கின்றனர் என்பது உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.