Wednesday, March 18, 2026

நவராத்திரி- சன்மார்க்க விளக்கம் – பாகம் 2

நவராத்திரி- சன்மார்க்க விளக்கம் – பாகம் 2 நவராத்திரி என்றால் நாம் கொலு வைத்து , பாட்டு பாடி ,பூஜை செய்து , சுண்டல் , இனிப்பு சாப்பிடுகின்றோம் ?? இதுவா இந்த பண்டிகையின் அர்த்தம் ?? அர்த்தம் என்னவென்றால் 9 நாள் முடிந்த பின் , அன்னை பராசக்தி மகிஷன் என்னும் அசுரனை வதம் செய்தாள் என்பர் இதன் உண்மை விளக்கம் யாதெனில் : 9 நாட்கள் = 9 ஒளிகள் – இதை கண் வைத்து செய்யும் சாதனாதந்திரம் மூலம் ஒன்றிணைக்க வேணும் இந்த 9 ஒளிகளும் மிக்க வெப்பம் உடையவை இவைகள் கொண்டு அந்த மகிஷன் என்னும் ” சோம்பலை ” ஒழிக்க வேண்டும் என்பது தான் உண்மையான அருத்தம் ஆகும் மகிஷன் 1 சோம்பல் என்னும் அசுரன் 2 இருள் ஆகிய அசுரன் அரக்கன் நம் எண்ணத்துக்கும் செய்யும் செய்யும் கிரியைக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம் – பாருங்கள் – இது எவ்வளவு உண்மை சுத்த சிவம் யானை ஆகிய அசுரனை வதம் செய்ததெனில் , சத்தி எருமை ஆகிய அசுரனை வதம் செய்கிறாள் ரெண்டும் ஒரே தத் துவத்தை விளக்க வந்த கதை புராணம் தான்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.