Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை
அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை
மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !!
காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !!
மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !!
காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! !
கண்விழிக்க வேகாதோ ??
பொருள் :
பொருள் இந்த பாடல் மூலம் உரைக்க முடியும்
சுத்த ஞானியின் பார்வை எப்படி ??
விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும்
அதில் காமம் - மயக்கம் - துரோகம் இருக்காது
ஏனெனில்
அவைகள் யாவையும்
மூலாக்கினியால் வறுக்கப்பட்டுவிட்டபடியால்
பஞ்சேந்திரியங்கள் அதன் சத்திகள் யாவும்
சுத்தம் செயப்பட்டு விட்டபடியால்
ஆன்ம நிலையில் காமம் -
உலக கவர்ச்சி ஈர்ப்பு எலாம் இலை
அவன் பார்வை கவனம்
உலக மயமாக இல்லாமல்
மேல் நோக்கி ஆன்மா நோக்கியே இருக்கும்
அவனது கீழ் பச்சைத் திரை எரிக்கப்பட்டுவிட்டதால்
அவன் சுத்தன் உத்தனம் -புருஷோத்தமன் ஆவான்
இதை ஆற்ற வழி தெரியாததால் , எல்லா மத சாமியார் , பாதிரியார் போதகர் , பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொள்கிறார்
பிரமாணம்
வியாசர் மகன் சுகதேவர்
அவர் என்றும் நிர்வாணக்கோலம் தான்
அவர் கங்கையில் நீராடச் செல்ல
அங்கே மங்கையரும் நீராட
அவர் கோலம் அவரை ஈர்க்கவிலை
அவர் மனம் விகாரம் அடையவிலை
அவர் ஆன்ம ஞானி'சுத்த ஞானி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.