Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
திருவடியும் சுத்த தேகமும்
திருவடியும் சுத்த தேகமும்
திருவெம்பாவை – திருப்பாவை – திருமந்திரம் ”
1 திருவெம்பாவை :
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
“ செங்கமலப் பொற்பாதந் “ தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
2 திருப்பாவை 17 :
அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
“ செம்பொற் கழலடி “ செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்!
3 திருமந்திரம்
“ சிவயநம எனும் குளிகை இட்டு “ செம்பொன் “ ஆக்குவன் தன் கூட்டையே “
விளக்கமாக ,
செம்பொன் என்பது திருவடியின் வண்ணம் நிறம்
அத்தகைய திருவடி ஒளியை தவத்தில் இறக்கி , சாதகன் உடல் முழுதும் பரப்பி , ஆன்மாவின் ஒளிமயமாக மாற்றம் செய்யலாம் என்றவாறு
இது ஆன்ம தேகம் சுத்த தேகம் ஆகும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.