Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
திருவாசகம் - எட்டாம் திருமுறை, உயிருண்ணிப்பத்து
ஆன்ம சாதகன் இலக்கணம்
ஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் - எட்டாம் திருமுறை, உயிருண்ணிப்பத்து.
வேண்டேன்புகழ் வேண்டேன்செல்வம்
வேண்டேன்மண் ணும்விண்ணும்
வேண்டேன்பிறப் பிறப்புச்சிவம்
வேண்டார் தமைநாளும்
தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு
திருப்பெருந்துறை இறைதாள்
பூண்டேன்புறம் போகேன்இனிப்
புறம்போகலொட் டேனே
விளக்கம் :
ஆன்ம சாதகன் எதை பற்றணும் ?? எதை விடணும் ?? என் விரித்துரைக்கிறார் மாணிக்க வாசகர் பெருமான்
1 வேண்டாதது
புகழ்
செல்வம்
மண்ணுலக விண்ணுலக வாழ்வு
நாஸ்திகர் தம் தொடர்பு ( இன்றைய அரசியல்வாதியர் )
2 வேண்டியது
உச்சி குளமாகிய பெருந்துறை விளங்கு சிவத்தின் திருப்பாதம் திருவடி மட்டுமே
அதுக்கு நான் ஐம்புலனை வெளியிலே புறத்திலே அலைய விடமாட்டேன்
இது தான் வழி
எப்படி ஆற்றுவது ?
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.