Saturday, March 7, 2026

திருமந்திரம் – உச்சி / நாதம் பெருமை

திருமந்திரம் – உச்சி / நாதம் பெருமை உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியேஇன்பம்கொள்வார்க்கு நமனில்லை விச்சம் விரிசுடர் மூன்றும் உலகுக்கும் தச்சும் அவனே சசைக்கவல் யானே . விளக்கம் : சுழி உச்சியில் நாத ஸ்தானத்து விளங்கு ஆன்மா ஆகிய இறை – அதனுடன் கூடி அந்த அனுபவம் பெற்ற ஆன்ம சாதகர்க்கு எம பயமில்லை மரணம் இல்லை – சமாதி அடைவர் உச்சியில் சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடும் இடம் அனுபவம் ஆகும் அதை உலகுக்கும் அளித்து காத்து வருபவன் ஆவன் இந்த மந்திரம் முச்சுடர் – உச்சி பெருமை பாட வந்தது
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.