Wednesday, March 4, 2026

நந்தி பெருமை “

“ நந்தி பெருமை “ திருமூலர் குரு நந்தி " நந்தி வழி காட்ட நானிருந்தேனே " நந்தி நந்தி என தன் பாடல்களில் தன் குரு பெருமை பாடியிருப்பார் அப்படிப்பட்டவர் எங்கு பிறக்கிறார் ?? எனில் ?? தவத்தால் சாதனத்தால் , இவர் அனுபவம் நமக்கு சாத்தியப்படும் புராணப்படி , நந்தி பிறந்த ஊர் திருவையாறு திருவையாறு எனில் ? ஐந்து இந்திரியங்களும் ஒன்று கூடும் அனுபவம் ஆம் மத்திமத்திலே மூலத்திலே நாதம் ஒலிக்கும் இடம் ஆகும் அதனால் தான் தியாகராஜர் ஆராதனை உற்சவம் எல்லாம் இங்கே கோலாகலம் மிக பிரசித்தி சுருங்கக் கூறில் , நாத விந்து கலக்கும் இடத்திலும் , நந்தி எனும் நல்ல தீ உருவாகும் கோவிலில் இது ஏகாதச அனுபவம் எனில் கர்ப்பக்கிரகம் விளங்கு லிங்கம் ஆகிய ஆன்மா துவாதசாந்த அனுபவம் கோவில் அமைப்பை ஆராய்ந்து உண்மை கண்டுபிடித்தாலே ஞானத்துக்கான விஷயம் அத்துபடி ஆமே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.