Thursday, March 5, 2026

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள்

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள் ( " அக்ஷ்ய திரிதியை விளக்கம் - கண்மணி பெருமை" ) வள்ளல் தர்மச் சாலை . அன்பர்கள் திடீரென்று அதிகம் பேர் வரவே – உணவு போதுமானதாக இல்லை இது அவரிடம் தெரிவிக்கப்பட்டது அவரோ சற்றும் அசராமல் - " பிச் - இலையைப்போடு என்றார் " போடப்பட்டது சாப்பாடும் பரிமாறப்பட்டது உணவு வந்து கொண்டே இருந்தது - தீரவேயிலை - காலியாகவிலை எல்லாரும் உணவருந்திச் சென்றனர் இது அக்ஷ்ய திரிதியையின் புற வெளிப்பாடு - இந்த அற்புதம் - இந்த சித்தி நிகழ்வு ஆகும் அள்ள அள்ளக்குறையாமல் வருதல் ஆனால் ஒன்றைக் கவனிக்க வேணும் – அப்போது வள்ளல் பெருமான் தான் பரிமாறினார் – பணியாள் அல்ல ஏன் ?? ஏனெனில் ?? அவர் தம் கண்களால் பார்க்க பார்க்க அது பெருகிக்கொண்டே போகும் – அளவே இல்லாமல் அதுக்காகத் தான் இந்த அக்ஷய திரிதியை அற்புதத்தைத் தான் இயேசு கிறிஸ்துவும் ரொட்டி மீன் துண்டு வைத்து செய்திருப்பார் தவம் சித்தியானால் யாராலும் ஆற்றக்கூடியதே ஆனால் மக்கள் தான் ஞானிகள் ரிஷிகள் மகான்களால் மட்டுமே சாத்தியம் என தவறாக கற்பிதம் செய்து கொண்டிருக்கார் இது கண்மணி பெருமை திருவடி பெருமை ஆகும் வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.