Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு - ஆடேடிப் பந்து
சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு
அருட்பா ஆறாம் திருமுறை
ஆடேடிப் பந்து
1. ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.
6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
விளக்கம் :
எப்படி வாழ வேணும் என தெரியாமலே உலகத்தவர் சாகிறார் என்றும்
அவர் எலாம் வெட்கும்படி நான் சாதலை தவிர்த்துவிட்டேன்
நான் எங்கும் எப்போதும் இருத்தல் என்ற மாபெரும் நிலை ஒப்பற்ற நிலை அடைந்து விட்டனன்
எப்படி எனில் ??
ஆய்வு செய்து , அதனால் , சுத்த சன்மார்க்கம் எனும் உத்தரம் ஆகிய உத்தர ஞான சிதம்பரம் என்ற வீதியை பற்றி நின்று , அதைவிட்டு நான் புறத்தே உலக வாழ்வு பக்கம் நான் சாயாமல் இருந்ததால் இத்தகைய பெரும் பேறு கிடைக்கப் பெற்றனன்
எல்லா உண்மையை ஒரு பாட்டில் போட்டுடைத்துவிட்டார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.