Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய அற்புதம் - காலம் வெல்லும் தந்திரம்
இடைக்காட்டுச் சித்தர் இயற்றிய அற்புதம் - காலம் வெல்லும் தந்திரம் Proving Time is fluid not linear
இடைக்காட்டுச் சித்தர் வாழ்ந்த ஊரில் மழைப் பொய்த்து - கடும் உணவுப் பஞ்சம் - நீர்ப் பஞ்சம் - ஊரில் கால் நடைகள் இறந்து கொண்டே வந்தன
ஆனால் இடைக்காட்டுச் சித்தர் மட்டும் முன்னமே இதை அறிந்து வைத்திருந்ததால், உணவை சேமித்து வைத்திருந்தார் - மேலும் தன் சக்தி மூலம் இதை சமாளித்து தன் கறவைகளுக்கு உணவும் நீரும் அளித்து காப்பாற்றி வந்தார்
இதை அறிந்த நவக்கிரகங்கள் இது எப்படி இவரால் சாத்தியமாயிற்று என்று மூளையைப் பிய்த்துக்கொண்டனர்
சரி - நேரில் சென்று பார்த்து வருவோம் என்று இவர் வீட்டுக்கு ஒரு சேர வந்தனர்
இவர் வீட்டுக்குள் நுழைந்ததும் அனைவரும் மயங்கி விழுந்து விட்டனர் - அவர் மந்திரக் கட்டு போட்டிருந்தார் - இவர்கள் வருவார்கள் என்று இவருக்கு முன்னமே தெரியும் இவருக்கு
பின் இடைக்காடர் தன் வீட்டுக்கு வந்தார் - பார்த்து விட்டு , அனைவரையும் எந்த எந்த இடத்தில் கிடத்தினால் மழை பொழியுமோ அந்த அந்த இடத்தில் கிடத்தினார்
மழை கொட்டோ கொட்டு என்று கொட்டித் தீர்த்தது - நீர் - உணவு பஞ்சம் தீர்ந்தது
சித்தர் பெருமக்கள் தன் நலன் துறந்தவர்கள் - உலக நன்மைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.