ஆன்ம அனுபவம் - சிவவாக்கியர்
அரியுமல்ல வயனுமல்ல வலப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்து நின்றகாரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10
விளக்கம் :
ஆன்மாவானது பிரம்மாவும் விஷ்ணுவுமல்ல
அதெல்லாம் தாண்டிய நிலை அனுபவம்
எல்லா வண்ணம் கடந்த அனுபவம்
எல்லா அளவும் கடந்தது
அது துரியமும் கடந்த துரியதீதம் எனும் துவாத சாந்தப்பதம் விளங்கு ஆன்ம ஜோதி அனுபவம்
அதைப் பற்றுங்கள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.