Tuesday, March 3, 2026

ஞானியர் உலகமயம்

ஞானியர் உலகமயம் 1 பட்டினத்தார் பாடல் வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் இறையாத தீர்த்தம் யார்க்கும் எட்டாத புட்பம் இனி முடித்து கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினில் முட்டாத பூஜையன்றோ குரு நாதன் மொழிந்ததுவே இந்த பாடல் ஆன்மீக உலகில் மிகச்சிறந்த புதிர் ஆகும் – எட்டிரெண்டுக்கு அடுத்தது இது என்றால் அது மிகையல்ல இதில் வெட்டாத சக்கரம் = சஹஸ்ராரம் 1008 இதழ்க் கமலம் – சஹ்ஸ்ரார சக்கரம் பேசாத மந்திரம் = மௌனம் இறையாத தீர்த்தம் = அமுதம் – ஆகாய கங்கை யார்க்கும் எட்டாத புட்பம் – வாசி இனி முடித்து கட்டாத லிங்கம் = விந்து கௌதமமணியாக மாற்றம் பெறுதல் கருதாத நெஞ்சம் = மனனம் இல்லா மனம் ( நினைக்காத மனம் ) கருத்தினில் முட்டாத பூஜை= ஆத்ம பூஜை மற்றொரு கோணத்தில் பார்த்தால் இவைகள் யாவுமே ஆன்மாவைக்குறிக்க வந்த பல்வேறு பதங்கள் ஆகும் ஒரே பொருளான ஆன்மாவைக்குறிக்க வந்த வெவ்வேறு பேர்களாகும் 2 கோரக்கர் சந்திர ரேகை விந்துநிலை விமலையவள் பீடம் உச்சி வெட்டாத சக்கரம் தான் கோசம் கோசம் அந்தமுடன் இறைக்காத சலம் நாதம் அன்புடனே எட்டாத புஷ்பம் வாசி சுகமுடனே கட்டாத லிங்கம் சுக்கிலம் பந்தமுறும் பரமனைய ஆன்ம ஜோதி பகர்குருவப் பூஜையுற்றா ணவங்கள் போமே இரு பாவுக்கும் பொருள் ஒன்றே ஞானியர் கருத்து ஒற்றுமை எப்படி ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.