Saturday, March 7, 2026

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - துறவு பெருமை “

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - துறவு பெருமை “ அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா னுறைவது காட்டக முண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 1616 விளக்கம்: சுத்த சிவம் குணம் உரைத்தல் 1 தர்ம வழி நிற்பவன் 2 பிறப்பில்லாத பெருங்குணம் உடையவன் அவன் இருப்பிடம் காடு ஆகிய துவாத சாந்த பெருவெளி எனும் தில்லை வனம் – கடம்ப வனம் அது மும்மலக் காடு 3 அவன் உணவு பிச்சை எனில் ?? பிச்சைக்காரர் மாதிரி அரிசி கோதுமை அல்ல விந்து தான் அவன் நம்மிடம் பிச்சை கேட்பது 4 அவன் எதனுடனும் கலவாமலும் தனித்து நிற்கும் குணமாம் துறவு கொண்டவன் யார் அந்த மாதிரி தனு கரண புவன போகம் துறக்கின்றாரோ, அவர்க்கு மீண்டும் பிறவா நெறியாம் மரணமிலாப்பெருவாழ்வு அளிக்கும் பித்தன் எல்லா சித்தியும் வழங்குபவன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.