Tuesday, March 3, 2026

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - ஞாதுரு ஞான ஞேயம்

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - ஞாதுரு ஞான ஞேயம் வைச்சன வாறாறு மகற்றியே வைத்து மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே 1608 விளக்கம் : உயிர் உடல் / பிறவி எடுத்த போது , அதனுடன் சேர்த்து வைத்த 36 தத்துவங்களையும் அகற்றி கழற்றி என்னை சுத்தன் ஆக்கி , மேலான பர / பரம நிலைக்கு மேலேற்றி , அதனுடன் கலக்க வைத்து அதன் மயமாக்கி , இனி பிறவி சுழலில் மீட்டும் வருமோ என்ற அச்சத்தை நீக்கி எனை ஆண்ட குரு நந்தி இங்கு பரம நிலை நந்தி என்பன யாவும் ஆன்மாவையே குறிக்குது ஆன்மா செய்த அரும்பெரும் அனுபவத்தை உரைக்கிறார் மூலர் பெருமான் வெங்கடேஷ் சதாசிவர் – மகாசதாசிவர் முதலாமவர் 5 தொழில் செய் தலைவரில் மூத்தவர் உச்சத்தில் இருப்பவர் 5 முகங்கள் – 5 தொழில்களும் ஒருங்கே இயற்றும் வல்லமை உடைய்வர் ஆயுள் – 43 20 000 ஆண்டுகள் ஆனால் மகாசதாசிவர் ?? 5 தொழில்கள் /முகம் * 5 = 25 முகம் / தொழில் ஆயுள் – 1 60 00 000 ( ஒரு கோடி 60 லட்சம் ஆண்டுகள் ) இயற்கை பிரபஞ்சம் விசித்திரம் வினோதம் நிறைந்தது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.