Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 75
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 75
இருந்தஇடந் தெரியாதே இருந்தசிறி யேனை
எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திடமேல் ஏற்றி
அருந்தவரும் அயன்முதலாம் தலைவர்களும் உளத்தே
அதிசயிக்கத் திருவமுதும் அளித்தபெரும் பதியே
திருந்துமறை முடிப்பொருளே பொருள்முடிபில் உணர்ந்தோர்
திகழமுடிந் துட்கொண்ட சிவபோகப் பொருளே
பெருந்தவர்கள் போற்றமணி மன்றில்நடம் புரியும்
பெருநடத்தென் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே
பொருள் :
நான் யார் என்றே அறியாத இருந்த என்னை - எல்லா உலகில் எல்லாரும் அறிய மேல் நிலைக்கு ஏற்றி - மால் பிரமனும் முதலா தலைவர்களும் வியக்க அருளமுதம் அளித்த பெரும் தலைவா
வே்தத்தின் அந்தத்தில் விளங்கும் பொருளே
அந்த முடியை உணர்ந்தோர் அடைந்த சிவபோகமே
அரிய தவத்தவர் போற்ற மணி மன்றில் நடம் செயும் ஆடல் அரசே என் சொல் மாலையும் அணிந்தருள் செய்கவே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.