Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
காரைச்சித்தரின் அற்புதங்கள்*
காரைச்சித்தரின் அற்புதங்கள்*
நமது சித்தரின் நெருங்கிய நண்பர் திரு ராமச்சந்திர ரெட்டியார் அவரை ஊரில் உள்ளோர் மீசை ரெட்டியார் என அழைப்பார்கள்
மீசை ரெட்டியார் தனது மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனயில் சேர்த்திருந்தார் அங்கே மருத்துவர் குழந்தை பிறப்பது சிரமம் பணம் அதிகம் செலவாகும் என்றனர் உடனே மீசை ரெட்டியார் காரைச்சித்தரை அணுகி பணம் தரும்படி கேட்டுள்ளார் அதற்கு நமது சித்தர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்
மீசை ரெட்டியாருக்கு பயங்கர கோபம் அதனால் சித்தரை திட்டிவிட்டு மீண்டும் மருத்துவமனை சென்றார் அங்கு சுகப்பிரசவமாக குழந்தைபிறந்து நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள் மீண்டும் நமது சித்தரை சந்தித்து ஏனய்யா குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பது உமக்கு தெரியும் அல்லவா அதை எம்மிடம் கூறியிருக்கலாமே என்று கேட்டார் எனக்கு தெரியாது அங்கே அமர்ந்திருப்பவன் செயல் என அங்கிருக்கும் அனுமன் கோயிலை காட்டினார் நமது சித்தர்
எவ்வளவு அற்புதங்கள் செய்தாலும் அவன் செயல் என கூறுவது வழக்கமாக இருந்தது
இதை சம்பவம் மீசை ரெட்டியார் 1985 காலங்களில் மீசை ரெட்டியிரே கூறியது
மேலும் நமது சித்தர் குஸ்தி பழகியவர் மீசைரெட்டியாருடன் குஸ்தி செய்வது பழக்கமாக இருந்தது 🙏🏼
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.