Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
செய்யுளும் உரை நடையும்
செய்யுளும் உரை நடையும்
1 செய்யுள்
அருட்பா ஆறாம் திருமுறை
மெய்யருள் வியப்பு
1. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ.
கண்ணிகள்
2. தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்ற தே
தாவிப் போகப் போக நூலின் தரத்தில் நின்ற தே
கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்த வே
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்த வே.
எனக்கும் உனக்கும்
3. இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே
ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே
அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே
அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே.
எனக்கும் உனக்கும்
2 உரை நடை :
அருட்பா உரை நடை
பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் நாடி வாயு வண்ணமாயும் அதற்கு மேல் அக்கினி வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், “ ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய் “
ரெண்டும் ஒன்றே தான் – ஒரே கருத்து தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.