Thursday, March 19, 2026

சாகாக் கல்வி - அருட்பெருஞ்சோதி அகவல்

சாகாக் கல்வி - அருட்பெருஞ்சோதி அகவல் 533. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித் தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே விளக்கம் : சாகாக்கல்வி என்றால் அதுக்கு பல படி நிலைகள் உள்ளன 1 நவகண்ட யோகம் 2 பிரபஞ்ச பேராற்றல் – காயகல்பம் இன்னும் பிற பிற பட்டியல் நீளும் இதெல்லாம் எனக்கு கற்றுத் தந்து – ஏகாக்கரப்பொருள் எனக்கு அளித்தான் அப்படி எனில் ?? இந்த பதிவில் இது தான் மிக மிக முக்கியமானது சாகாக்கல்விக்கு அடிப்படை ?? சாவேபோ ஆகிய சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் இம்மூன்றும் இணைக்கும் ஒரு பொருள் அது தான் ஏகாக்கரம் அது அமுதமாகிய போகாப்புனல் அதில் தான் ஒளி தேகம் ரகசியம் சூக்கும ம் அடங்கி இருக்கு அதை எனக்கு தெரிவித்தார் என்பது தான் இந்த அகவல் வரிகள் அந்த அனுபவம் ஆகாய கங்கை அனுபவம் எனக்கு அளித்தார் என்றவாறு
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.