Friday, March 6, 2026

அமர்நாத் பனிலிங்கம் – விளக்கம்

அமர்நாத் பனிலிங்கம் – விளக்கம் இந்தியாவின் பனி படர்ந்த இமய மலையில் அமைந்திருக்கும் அமர்நாத் குகைக்கு லட்சக்கணக்கான மக்கள் கடும் தட்ப வெப்பத்தை பொருட்படுத்தாமல் பயணித்து இந்த லிங்கத்தை தரிசனம் செய்கின்றனர் மடாதிபதிகள் இதே போல் கயிலாய மலைக்கும் சென்று வருகின்றனர் – கயிலை சென்று வந்து ” கயிலைப் புனிதர் ” என்ற பட்டத்தை வேறு சூட்டிக்கொள்கின்றனர் – நகைப்புக்குரிய விஷயம் இதெல்லாம் அகத்திலே செய்ய வேண்டிய விஷயங்கள் – அகத்திலே செய்ய முடியாதவர்கள் புறத்திலே அமைந்திருக்கும் ஸ்தலங்களுக்கு முடித்துக் கொள்கின்றார்கள் – அதில் பெருமையும் கொள்கின்றார்கள் அமர் நாத் பனிலிங்கத்தின் தாத்பரியம் : அகத்தில் உடலில் இருக்கும் விந்துவை – கீழ் நிலை சுக்கிலத்தை சாதனா தந்திரத்தால் மேல் நிலை சுக்கிலமாக மாற்றி – அதனை மேலும் துவாதசாந்தப் பெருவெளிக்கு மேல் கொண்டு சென்று – நிலா மண்டபத்தில் ஏற்றி , அதனை அங்கிருக்கும் குளிரால் குளிர வித்தால், விந்துவானது இறுகி மணி போல் ஆகிவிடும் இதனையே சுப்பிரமணி – சிரோன்மணி – கவுதம மணி என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கின்றோம் நாம் இந்த மணி தான் கௌரவ குரு துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் நெற்றியில் விளங்கியது – அதனால் அவன் சிரஞ்சீவி – மரணமிலாதவன் ஆக விளங்கினான் என்பது புராணம் இதனை நடைப்படுத்தும் சாதனா தந்திரம் மிகவும் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கின்றது – செயல் படுத்திக் காட்டுபவர்களும் தற்காலத்தில் இல்லை என்றே எனலாம் – அரிது எனலாம் அமர்நாத் பனி லிங்கம் என்பது இந்த சாதனத்தை வலியுறுத்துகின்றது – இதனை மக்கள் புரிந்து கொள்வதே இல்லை – புறத்திலே கிரியைகளுக்கு காட்டும் அக்கறை முயற்சி சிறிதும் அகப் பயிற்சிக்கு காட்டுவதில்லை விந்துவை மணியாக மாற்றத் தெரிந்தால் அவனுக்கு மரணமிலாப் பெருவாழ்வு நிச்சயம் கைவல்லியம் ஆகிவிடும் – இந்த அனுபவத்தை தான் வள்ளலார் ஷண்முக மணி – தெய்வமணி என்றெல்லாம் அழைக்கின்றார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.