Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
“ வள்ளலாரும் – முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரும் “
“ வள்ளலாரும் – முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரும் “
வள்ளலார் செய்த கண்ணாடி தவத்தை அப்படியே எம் ஜி ஆரும் செய்திருக்கார் என்றால் நம்ப முடிகிறதா ?
ஆம் உண்மை தான்
இதை திரைப்பட சண்டை பயிற்சி காட்சி இயக்குநர் ஒரு பேட்டியில் கூறி இருக்கும் வீடியோ கண்டு நான் வியந்தும் அதிர்ந்தும் போனேன்
கண்ணாடியும் அகல்விளக்கும் வைத்து நம் முன்னாள் முதல் அமைச்சர் பயிற்சி செய்துள்ளார்
மேலும் இது பத்தி கூறுகையில் இது கேட்டதெலாம் கொடுக்கும் வல்லமை உடையது என விளக்கியுள்ளாராம்
எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம் தான்
ஆகா சரியாகத்தான் கூறியுள்ளார் புரட்சித் தலைவர்
ஆனா இது மன வளக்கலை மன்றம் – கண்ணாடி பயிற்சி அல்ல என அறிய வேணும்
இதே பயிற்சி வள்ளல் பெருமானும் தன் 12 வயதில் தன் ஏழு கிணறு வீதி வீட்டில் மேல் மாடி தனி அறையில் பயின்றார்
அந்த அறை இப்போதும் பூஜை செய்து வருகின்றார் அவர் பக்தர்
கேவலம் வெட்கக்கேடான விஷயம் என்னவெனில் ??
ஒரு சன்மார்க்க சங்கத்துக்கும் / சன்மார்க்க அன்பர்க்கும் இந்த பயிற்சி விவரம் பெருமை வல்லமை தெரியாது
அவர்க்குத் தெரிந்தது எல்லாம் அன்னதானம் தான் – தயா ஒழுக்கம் – சத்விசாரம் பரோபகாரம் என்பார்
ஆனால் சரக்கு ஒன்றும் லேது பயிற்சி அனுபவம் ஏதும் இல்லை – வெறும் வாய் தான்
சோறு மட்டுமே அறிந்த மட்டி மாடுகள்
தெரிந்த ஒரே விஷயம் – சோறு சோறு தான்
வசூல் செய்து , அன்னதானம் செய்து வருவதுக்கே வாய் இவ்வளவு இருக்கு
இது தான் சன்மார்க்கத்தின் அடிப்படையான பயிற்சி
இது கொண்டு தான் மேல் படிகளுக்கு தயார் ஆகணும் ஏறணும்
எப்ப உலகத்துக்கு விடிவு ??
கேட்டால் :
வள்ளலார் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என கூறி சென்றுள்ளார் என்பர்
நீங்கள் கவலைப்பட வேணாம் என்பர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.