Friday, March 6, 2026

மெய்யருள் வியப்பு – 8 விளக்கம்

BG Venkatesh / May 11, 2015 மெய்யருள் வியப்பு – 8 விளக்கம் எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டியே துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ஏற்றியே தூண்டாது என்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றியே ( பாடல் 48 ) எட்டும் இரண்டும் இது தான் என்றெனக்கு சுட்டிக் காட்டியே – எட்டும் இரண்டும் இது தான் என்று கையினால் சுட்டி விளக்கி ( எட்டிரண்டு பற்றி தனிக் கட்டுரையில் விளக்கப் பட்டிருக்கின்றது ) எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டியே – யாரும் ஏறா நிலையாகிய 36தத்துவங்களைக் கடந்த நிலையில், ஆன்ம நிலையில் என்னை கூட்டிச் சென்று துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ஏற்றியே – ஆன்ம ஜோதியை ஏற்றி கன்ம மலம் தனை தீர்த்து திரண்ட கருத்து : 36 தத்துவங்களையும் கடக்கச் செய்து ஏறா நிலை ஏற்றி , ஆன்ம ஜோதியை ஏற்றி , கன்ம மலத்தை தீர்த்து வைத்தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.