Thursday, March 5, 2026

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 12

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 12 அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்  பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்  மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்  தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.  பொருள் : சிற்றம்பலத்திலே அழியாத அருள் விளங்குகின்றது  உலகப்பொருள் எல்லாம் அழிந்தாலும் அருள் அழியா செல்வம்  அது விந்துவால் அடைவதாம் ஆதலால் மயக்கம் உடை மன வாதனை தவிர்த்து அருள் வல்லபத்தால் ஞான மார்க்கமாம் சுத்த சிவ சன்மார்க்கம் தான் சிறந்தது என தெளிவு அடைவீர்   2 அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 11 கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை  நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்  பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்  விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே பொருள் : வேகாக்கால் விளங்குகின்ற சிற்றம்பலத்திலே சுத்த சிவம் - அபெஜோதி விளன்குகின்றபடியால் இங்கே நிலைக்க இங்கு வரவும் - மாற்றாக - கொலை - புலை செய்வீரேல் சமயத்தில் புகவும் - உங்கள் விதியை நொந்து கொள்ளவும்    வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.