Thursday, March 5, 2026

ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 5

ஒழிவில் ஒடுக்கம் – பாகம் 5 1. ஆடை கழற்றி ஆணும் பெண்ணும் கூடுவது உலக வழக்கு – உலக இயற்கை இது புறச் செயல் – அனுபவம் ஜீவனுக்கு 36 தத்துவங்களே ஆடைகள் அதை கழற்றினால் தான் ஆன்மாவுடன் கலக்க முடியும் இது அகத்தில் ஆற்றும் செயல் – அனுபவம் புற அனுபவம் எல்லோர்க்கும் கிட்டும் எல்லோரும் அனுபவிப்பர் அக அனுபவம் எல்லோர்க்கும் கிட்டுவது எளிதல்ல ஏனெனில் – அது ஏறா நிலை சாமானியரால் ஆற்ற முடியா செயல் 2. ஒரு மனைவி தன் கணவனுக்கு மட்டும் தன் அழகை வெளிபடுத்தி கூடுவாள் இது உலக வழக்கு – உலக இயற்கை அது போல் பக்குவப்பட்ட ஆன்மாவிடமே சத்தினிபாதம் விளங்கும் ஆன்மாவிடமே அருள் தன்னை வெளிப்படுத்தி தன்னை உணர்த்தி ஆன்மாவிற்கு வழி காட்டி சிவத்திடம் கலக்க வைக்கும் இது அகச் செயல் – அனுபவம் புறத்திலே தெரியும் பொருட்களும் விளங்கும் செயல்களும் அகத்தின் வெளிப்பாடு அல்லாது வேறிலை தான் அகத்திலே 36 தத்துவங்களைக் கடந்ததையே 36 தத்துவங்களைக் கழற்றியதையே புறத்திலே காட்ட நிர்வாணமாக ஆடையின்றி நிற்கின்றார் பாஹுபலி – சிரவணபெலகொலாவில் 2. தற்போத வொழிவு ஏற முடியாததில் ஏறிவிடலாம் அடைய முடியாததை அடைந்துவிடலாம் தொட முடியாததை தொட்டுவிடலாம் காணமுடியாததை கண்டுவிடலாம் எல்லாம் ஒன்றில் அடங்கிய சூட்சுமம் தற்போதம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.