சமய மதமும் சுத்த சன்மார்க்கமும் 3
முன்னர் இரு பாகம் வந்தது
நீண்ட இடைவெளிக்குப் பின் மூன்றாவது
அதாவது இதுகாறும் உலகம் கண்டு வருவது யாவுமே ஆன்மாவின் வெளிப்பாடுகளே அல்லாது வேறிலை என்பது உண்மை
நம் கோவில் அமைப்பு , திருவிழா , பண்டிகைகள் விரதம் பூஜை விரதம் வேள்விகள் , அனுஷ்டானம் எல்லாமே ஆன்மாவை அடைவதுக்காக வகுக்கப்பட்டு அதை மனித குலம் கடைபிடித்து அந்த ஆன்ம லாபம் அடைவதுக்கே
இதிகாசம் புராணம் காப்பியம் கூட ஆன்மாவை கோடிட்டு காட்டுவது தான்
இது தேசம் மதம் சமயம் கடந்த வஸ்து பொருள் ஆகையால் இது பொது
எல்லார்க்கும் பொருந்தி வருவதாய் அமையும்
ஆனால் மற்ற மதத்தவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்
ஆக எல்லா கோவில்களில் இருக்கும் மூலவர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
காசி விஸ்வநாதர்
காஞ்சி ஏகாம்பரர்
அரங்க நாதர்
பழனி முருகன்
எந்த கோவிலாகட்டும் அங்கு வணங்கப்படுவது ஆன்மா ஆகிய லிங்கம் தான்
வேதங்கள் கூறும் பிரம்மம் கூட ஆன்மாவைத்தானே அல்லாது வேறிலை
என்பது உண்மை
இதில் சைவம் மட்டும் தான் விதி விலக்கு
அதனால் தான் வள்ளல் பெருமான் : சைவத்தில் மட்டுமே சாகாக் கல்வி உள்ளது
நம் அடியார் : சைவத்தின் மேல் சமயம் இல்லை
அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமில்லை
சைவம் ஆன்மா தாண்டி செல்லும் தன்மை விளக்கம் உடைத்து
அது சிற்றம்பல அனுபவம் வரை கூறும்
சித்தர்கள் ரிஷிகள் அனுபவம் ஆன்மாவை வரை தான் இருக்கும்
அது துவாதசாந்தம் வரை தான் - அவர் அடைந்தது ஜீவ சமாதி
ஆனால் தேவையோ – சகச சமாதி பழக்கம்
அதுக்கு மேல் ஐந்து படி நிலைகள் இருக்கு
அதனால் தான் வள்ளல் பெருமான் உரை நடையில் : சமயத்தில் உச்ச கட்ட அனுபவம் திரையோதசாந்தம் வரையில் தத்துவ ராயர் முதலானவர்
அனுபவித்திருப்பர்
அதுக்கு மேல் சுத்த சன்மார்க்க அனுபவம்
மேலும் சமய மத தெய்வம் எல்லாம் அபெஜோதி ஆண்டவரின் கால் கடைவிரல் நகம் எழு தூசிக்கு கூட சமம் ஆகார் எனில் அவர் தம் பெருமை நோக்க வேண்டும்
ஆர் சாகாக்கல்வி கற்றிருக்காரோ விளங்கிக்கொண்டிருக்காரோ ? அவர்க்கு தான் சுத்த சன்மார்க்கம் விளங்கும்
அந்த குறிப்பிட்ட உயிர்க்கு சன்மார்க்க காலம் விளங்கும் காலம் ஆகும்
பெருமான் உரை நடை:
ஆதியில் உண்மை மறைத்துவிட்டவன் ஒருவன் என்பது இந்த உண்மைகளைத்தான்
உலகத்துக்கும் உண்மைக்கும் ஒளி ஆண்டுகள் தூரம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.