Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
எழுவார் மேடை “ - சன்மார்க்க விளக்கம் 3
எழுவார் மேடை “ - சன்மார்க்க விளக்கம் 3
தயவு ?? திண்டுக்கல் சரவணானந்தா சத்திய ஞான சபை – தத்துவ ஞான விளக்கம் - நூலில் :
சத்திய ஞான சபையின் இரும்பு சங்கிலிப் பெருவாயில் கடந்து உட்செல்வோர்கள் சபையின் தென் கிழக்கிலுள்ள எழுவார் மேடையை அடையவேண்டும்.
இம்மேடை நம் அறிவு பீடத்தின் தென்கிழக்கு இது நமது இடது கண்ணை குறிப்பதாயுள்ளது.
இதன் மீது பனிரெண்டுகால் மண்டபம் உண்டு ..இந்த எழுவாய் மேடைக்குப் படிகள்( 6 ) இப் மேடைக்கு மேலேறிப் புறத்தில் நோக்கினால் சிதம்பரக் கோபுர தரிசனையும் அகத்தில் நோக்கினால் ஞான சபைக் அச்சபையும் விளக்கம் தோன்றும்.
இதன் உண்மை யாதெனில் சீவ தயுவுடையவர்கள் சூரிய கலை நிலையில் இருந்து திருவருள் உணர்வை பெற்று நிற்க்கும் போது புற ஆகாசத்தில் அழலொளி விளக்கமும் . அகத்தில் அருள் ஒளி விளக்கமும் தோன்றுவதாகும் ..
புற ஆகாச அழலொளி சிதம்பர தரிசனையாகவும் அகத்தில் தோன்றிய அருள் ஒளி சுத்த சன்மார்க்கக் கொடியும் ஞான சபையாகவும் அறியப்படும் .
இக் காட்சியினால் இறவாத வரம் பெறப்படுவதாகும் .
அதனால் சுத்த தேகமாக்கப்படுகின்றது. இந்நிலையில் அழியாத அருளறிவு சித்திப்பதாகும் .
இம்மேடைக்கு இதனால்
எழுவார் மேடை என்ற அருட்சிறப்பு காரணப் பெயராயிற்று..
அம்மேடையின் ஆறுபடிக்கும் ஆறு ஆதாரத்தைக் குறிப்பதாகும் ..
அதற்கு மேல் விளங்கும் பனிரெண்டு கால் மண்டபம் .
துவாத சாந்த சகஸ்திரப் பதியை குறிப்பதாகும் அப்பனிரெண்டாம் அனுபவ நிலை மீது ஒளிர்வது சத்திய ஞான சபையாயும் .சிதாகாச விளக்கமாயும் திகழ்வதாயிற்றாம்..
இதன் கருத்தை சுத்த சன்மார்க்கத்திலறியப் படுவதாகிறது...
உண்மை விளக்கம் :
இம்மேடை நம் அறிவு பீடத்தின் தென்கிழக்கு இது நமது இடது கண்ணை குறிப்பதாயுள்ளது // இது தப்பு
படத்தை பார்த்துத் தெளிந்து கொள்ளவும்
தென் கிழக்கு எந்த திசை குறிப்பிடுது என பார்க்கவும்
இதுக்கு ஆராய்ச்சி பயிற்சி அனுபவம் வேண்டும்
இதெல்லாம் சன்மார்க்கத்தில் அறவே இல்லாததால் , இவ்ளோ பிரச்னையும்
மேலும் இதன்
1 உண்மை விளக்கம்
2 இதன் மீது எப்படி ஏறுவது ??
3 ஏறுவதால் அடையும் அனுபவம் தான் என்ன ??
எல்லாம் தக்க குரு விளக்குவார்
அனுபவத்தில் இருக்கும் குரு விளக்குவார்
எப்படி /எங்கு பார்த்தால் சிதம்பரம் கைலாயம் தெரியும் என விளக்குவார் ?
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.