Wednesday, March 4, 2026

நெற்றிக் கண் திறக்கும் வழி – பாகம் 3

நெற்றிக் கண் திறக்கும் வழி ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள் 1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல் 2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல் 3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல் ( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் ) 4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் 5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும் மனமும் அசைவற்று நிற்றல் 6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல் 7 மூலாக்கினியால் மனோ நாசம் – மனம் அடங்கிப் போதல் 8 மேலும் மூலாக்கினியால் நாதம் உண்டாகுதல் விந்து – பரவிந்துவாக மாற்றம் அடைதல் : 9. சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல் 10 கண்மணிகளினால் சிவக்கலை ( விந்து ) நடு நெற்றிக்கு மேலேறுதல் 11. மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல் 12 வாசி உருவாதல் 13 நாதத்தால் பரவிந்து வாசியுடன் கலத்தல் 14 விந்து + வாசி சுழிமுனை நாடி – , உச்சிக்கு – பிரமப்புழைக்கு விரைந்து ஏறுதல் 15 பிரமரந்திரம் திறப்பு – பரமபத வாசல் திறப்பு – உள் பிரவேசித்தல் 16 மூலாக்கினியின் தகிப்பால் மும்மல நாசம் – பழ வினைகளும் நாசம் 17 ஆன்ம தரிசனம் – மௌனம் – 1008 இதழ் கமலம் இதில் 4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் என்பது திருவிளையாடற் புராணத்தில் – சிவபெருமான் – வலைஞன் போல் வந்து மீன் பிடிப்பது என்ற கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது மீன் = பஞ்ச இந்திரிய சத்திகள் 5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும் மனமும் அசைவற்று நிற்றல் என்பது திருவிளையாடற் புராணத்தில் – தக்ஷ யாகத்தை அழித்தும், தக்ஷனை வதம் செய்தும், அவன் தலை கொய்து அதற்கு பதிலாக ஆட்டுத் தலை வைத்தான் என்ற கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது 11. மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல் என்பது இராமாயணத்தில் – ஸ்ரீ ராமன் என்ற பாத்திரத்தாலும், வள்ளலார் தன் உரைனடையில், பேருதபேசத்தில், கீழிருக்கும் பச்சைத் திரை விலகினால் , இராகத் துவேஷங்கள் நீங்கி , சுத்தராகவும் , புனிதராகவும் விளங்குவார்கள் என்ற கூற்றாலும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது ஸ்ரீ ராமன் = புருஷோத்தமன் என்பது நினவு கூறத்தக்கது 12 வாசி உருவாதல் என்பது திருவிளையாடற் புராணத்தில் நரியை – பரியாக மாற்றிய கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது நரி – சூரிய கலை பரி – சந்திர கலை இட கலை BG Venkatesh

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.