Saturday, March 14, 2026

திரு ஞான சம்பந்தர் – பாகம் 2

திரு ஞான சம்பந்தர் – பாகம் 2 BG Venkatesh / March 18, 2015 வள்ளலாரின் குரு இவர் ஆவார் யாருமே நம்ப மாட்டார்கள் – ஏனென்றால் 63 வரையுமே தத்துவங்கள் என்று வள்ளல்பெருமான் வகைப்படுத்தி உரை நடையில் குறிப்பிட்டுள்ளார் என்பர் உரை நடைப் பகுதியில் இருக்கும் விவரங்கள் யாவும் பெருமான் தன் கைப்பட எழுதியது அன்று. அவரது அணுக்க தொண்டர்கள் அவர் கூறியதை கேட்டு குறிப்பெடுத்து பின்னர் அவைகள் தொகுத்து வெளியிடப்பட்டதாகும் அப்படி கூறியிருந்தது உண்மை என்றால் – ஏன் வள்ளலார் திருமந்திரம் திருவாசகம் படிக்கச் சொல்லவேண்டும் – அவைகளில் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் உள்ளன என்ற அர்த்தத்தில் சொல்ல வேண்டும் ?? அப்படி கூறியிருந்தது உண்மை என்றால் – ஏன் வள்ளலார் திரு ஞான சம்பந்தருக்கு ” சூனிய சிம்மாசனம்” அமைத்து , அதில் அவர் வீற்றிருப்பதாக பாவித்து , பிரதி வியாழன் தோறும் பூஜைகள் இயற்ற வேண்டும்?? வள்ளலாருக்கு தெரிந்திருக்கிறது இவர் தான் திருவடி – அருட்சத்தி – இவரைப் பிடித்தால் தான் எல்லாம் நடக்கும் என்று – அதனால் தான் அவர் மீது ” ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை ” என்று பாடினார். திரு ஞான சம்பந்தர் தான் இவருக்கு வழி காட்டி , வாசியாகிய வேகாக்கால் கிடைக்கச் செய்து , அருள் கிடைக்கச் செய்து , எல்லா சித்திகளையும் – கரும – யோக – ஞான சித்திகளை ( 647 கோடி ) அடையச் செய்து – சுத்த சன்மார்க்கத்தின் மரபை பெறச் செய்தும் – அணுவும் செல்ல முடியாத திருச்சிற்றம்பலத்திற்குள் நுழையச் செய்தவர் சம்பந்தப் பெருமான் ஆவார். முத்தேகச் சித்தி – சுத்த பிரணவ ஞான தேகம் பெறச் செய்தவர் சம்பந்தப் பெருமான் ஆவார். மொத்தத்தில் – வள்ளலார் பெற்ற எல்லா பேற்றிற்கும் முழு முதல் காரணம் – சம்பந்தப் பெருமான் ஆவார் – ஏனெனில் அவரே திருவடி – அருள் எல்லாம். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.