Tuesday, March 17, 2026

சாலை - சாலை அப்பன் – சாலை ஆண்டவர் – சன்மார்க்க விளக்கம் 2 “

சாலை - சாலை அப்பன் – சாலை ஆண்டவர் – சன்மார்க்க விளக்கம் 2 “ ஆறாம் திருமுறை / Sixth Thirumurai 117. ஞான மருந்து மேலை வெளியா மருந்து - நான் வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து “ சாலை விளக்கு மருந்து “ - சுத்த சமரச சன்மார்க்க சங்க மருந்து விளக்கம் : பரவிந்து கலை சாலை ஆகிய சுழிமுனை நாடி வெளிச்சம் போட்டுக் காட்டும் வல்லமை உடைத்து சாலையப்பனை வேண்டல் கொச்சகக் கலிப்பா • 7. வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர் சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் சாலை அப்பா எனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே. விளக்கம் : இங்கு குறிக்கப்பெறும் சாலை சென்னை அண்ணா சாலை , வண்ணை தங்க சாலை அல்ல அது சு நாடி ஆகும் “ சாலை அப்பனாகிய ஆன்மா “ என பாடுகிறார் இதனால் சாலை ஆண்டவர் என்பதும் ஆன்மாவைத் தான் குறிக்கும் மக்களுக்கு பரந்த அறிவு வேணும் – எல்லாம் ஒன்றே என சமரச அறிவு வேண்டும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.