Monday, March 16, 2026

ஆன்மாவா - மனமா ?? - பாகம் 1 புதிர் பதில்

ஆன்மாவா - மனமா ?? - பாகம் 1 புதிர் பதில் புதிர் ?? எல்லாரும் " மனம் மனம்" என இதன் மகிமை பாடுகிறார் மன வளக் கலை - எல்லா குழுக்கள் இதன் பெருமை பாடுகிறார் " மனம் தான் எலாம் - மனம் தான் உயிர் ஆன்மா என்றே முடிவெடுத்துவிட்டார் " அப்படியெனில் - எனக்கு ஒரு சந்தேகம் ?? " விக்யான் பைரவ தந்தரா " - நூல் 112 தியான முறை சொல்கிறது அதில் ஒன்று தான் நான் குறிப்பிடுவது அது " மனதை உற்று நோக்குக " போதும் இதுவே தியானம் - தவம் என கூறுகிறது அப்படியெனில் - மனதை உற்று நோக்கும் வஸ்து எது ?? எல்லாம் மனம் எனில் இந்த முறை எப்படி நடைமுறைக்கு வந்தது ?? " Witnessing is the Way - Vighyan Bhairav Tantra " இதோ பதில் : மனம் அந்த செயலை செயவிலை என்பது உண்மை ஒரு உதவியும் இல்லாமல் எப்படி ஒரு பொருள் தன்னைத்தானே நோக்க முடியும் ?? அதைச்செய்ய கண்ணாடி வேண்டும் அதனால் மனம் அல்லாத ஒரு வஸ்து மனதை உற்று நோக்குது அதனால் மனம் தன்னைத்தானே உற்று நோக்கவிலை அப்படி கூறுபவர்கள் தவறான பாதையில் நம்மை கூட்டிச்செல்கிறார்கள் என்று பொருளாகும் பின் என்ன ?? அது ஆன்மா Atman = Inner Being with nil black characters அதுக்குத்தான் இவ்வளவு முயற்சிகள் சாதனை தவம் தியானம் எல்லாம் செய்வது நான் சொல்வதுக்கு பிரமாணம் ?? இது 1 உபனிஷத்தில் ரெட்டை பறவை கதையாலும் இதை இங்கு சென்று படித்துக்கொள்ளவும் - இங்கு பதிவிட நேரமிலை 2 வள்ளலார் தன் உரை னடையில் ஜீவன் கருவி கரணங்களுடன் சேர்ந்தே இருக்கும் - நம் தற்போதைய நிலை ஆனால் - ஆன்மா தனித்தே நிற்கும் என்பதாலும் இது நிரூபிக்கப்பட்டிருக்கு இதை குறித்தே - " என் தனித்தலைவர் தனித்தலைவர் " என்றே விளித்துப்பாடுகிறார் தன் அருட்பாவில் தனித்தலைவர் = ஆன்மா ஆகும் இந்த தியானம் ( விக்யான் பைரவ தந்த்ரா முறை ) எதுக்கு சொல்லப்பட்டது எனில் ?? மனதிலிருந்து தன்னை - ஜீவனைப்பிரித்துப் பார்க்கும் பழக்கம் வளர வேண்டும் என்பதுக்காகத் தானே அன்றி வேறெதனாலும் அல்ல இதுக்கு ஒரு கதை கூட நம் புராணத்தில் உள்ளது - ஆட்டுக்கூட்டத்தில் சேர்ந்த புலிக்குட்டி போல் - பின் அது தன்னை அடையாளம் கண்டு கொண்டது போல் - அப்போது தான் ஜீவனை பிரித்து அதை சுத்தப்படுத்தி ஆன்மாவுடன் கலக்க வைக்க முடியும் மேலும் ஜீவான்மா என்று பகர்கிறார் ஜீவன் + ஆன்மா = ஜீவான்மா ஆகும் அதாவது ஜீவன் ஆன்மாவுடன் கலந்த பின் தான் அதுக்கு ஜீவான்மா என்று பெயர் ஆகும் கலவாத வரையில் ரெண்டும் தனித்தனி தான் ஆன்மா - மேல் நிலை உயிர் ஆகும் வ ெங்கடேஷ் தொடரும் - 2 பாகம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.