Monday, March 9, 2026

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 தடுக்குமே கோடான கோடிசக்தி தான் வந்து போராடி மாளுமாளும் அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே அய்யய்யோ எத்தனையோ எண்ணவுண்டோ?? விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும் கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை கூறாது தடுத்துவிடும் மேலேற பொருள் : ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர் கோடான கோடி சக்திகள் வந்து ஆசை காட்டி , மயக்கி , தவத்தில் இருந்து சறுக்க முயற்சி செய்வார் தவத்தை கலைக்க பார்ப்பார் எல்லா ஞானிகளும் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.