Monday, March 9, 2026

சுழுமுனை - வாசியும் யோக சித்தியும்

சுழுமுனை - வாசியும் யோக சித்தியும் காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 ஏறுமல்லோ நாசிவழி ஓடுமூச்சு ஏறுமந்தப் புருவமத்தி வாசலேறும் பாருமே அங்கிருந்து மேலேயேறப் பழகினால் மேலேறும் நாசிவாரா நீறுமே வாசல்வழி தடைகளெலாம் நீங்கிடுமே புருவமதற்குள்ளே ஏறும் காருமே மூக்குமுனை புருவமத்தி கால்வாசி மேலேற யோகசித்தே பொருள் : தவத்தால் , மூக்கில் ஓடும் சுவாசம் , மடை மாறி , புருவ வாசல் திறந்து , மேலேறும் அதையே பழகி வந்தால் – மூக்கு சுவாசம் நின்று போகும் – சதா மேலேறிய வண்ணமிருக்கும் இது தான் வாசி யோகம் அப்போது அதன் தடைகள் எலாம் தகறும் உச்சிக்கு மேலேறுவதால் யோகசித்தி கைகூடுமே வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.